உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார்: சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய (தற்காலிகம்) தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-1, மதிப்பூதியம் மாதம் 70 ஆயிரம் ரூபாய், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-2, மதிப்பூதியம் மாதம் 40 ஆயிரம் ரூபாய், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-1, மதிப்பூதியம் மாதம் 25 ஆயிரம் ரூபாய், அலுவலக உதவியாளர் -1, மதிப்பூதியம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற ன. அலுவலக உதவியாளர் பதவியை தவிர்த்து தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குற்றவியல் வ ழக்குகளில் 7 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் https:// cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், கடலுார் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பி வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை