பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலுார் : கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக பெரியார் விருது, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை பெறுவோ ருக்கு ரூ.50 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்க பதக்கம், வழங்கப்பட்டு வருகிறது.2024ம் ஆண்டுக்கான, பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகிறது. விருதினை பெற்றிட சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரின் பெயர் சுயவிவரம் மற்றும் முழு முகவரி மற்றும் தகுதிக்கான உரிய ஆவணங்களுடன் 20.12.2024-க்குள் கலெக்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கடலுார் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.