உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி அதிகாரிகள் நியமனம்

நகராட்சி அதிகாரிகள் நியமனம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் பல மாதங்கள் காலியாக இருந்தது. இதனால், கட்டட அனுமதி பெறாமலேயே பலர் கட்டடங்கள் கட்டி வருவதால் நகராட்சி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதேப் போன்று இன்ஜினியர் பணியிடமும் காலியாக உள்ளதால் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் பணி தரமில்லாமல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. துப்புரவு ஆய்வாளர் பணியிடமும் காலியாக இருந்தததால் துப்புரவு பணிகளை கண்காணிக்க முடியாமல் போனதோடு பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, கட்டட ஆய்வாளராக செழியன், துப்புரவு ஆய்வாளராக கேசவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ