நியமனம்
கடலுார்: அகில இந்திய காங்., சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வர்த்தக துறையின் மாநில துணைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரைன் ஜிம் தமிழ்நாடு அகாடமி திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் திருமுகம். இவர், அகில இந்திய காங்., சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வர்த்தக துறையின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, அகில இந்திய வர்த்தக காங்., தேசியத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வழிகாட்டுதல்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வர்த்தக துறையின் தேசியத் தலைவர் சுதாகர் சுந்தரவேல் நியமனம் செய்துள்ளார்.