ஏ.ஆர்.ஜி., பள்ளியில் பாராட்டு விழா
சிதம்பரம்: சிதம்பரம் ஏ.ஆர்.ஜி., அகாடமி பள்ளியில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஏ.ஆர்.ஜி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கும் அனைத்து பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் ஆடியபாதம் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளியின் முதல்வர் கீதா கணேசன், செயலர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.