பாராட்டு விழா
நடுவீரப்பட்டு:கொடுக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வியாபார சங்க பேரவை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. கடலுாரில் நடந்த அனைத்து வியாபார சங்கங்களின் பேரவையின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவில், கொடுக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லதாவிற்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது . அதனையொட்டி, அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கொடுக்கன்பாளையம் மாயவேல், அசோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.