உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் முஸ்தபா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

சிதம்பரம் முஸ்தபா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

சிதம்பரம்: சிதம்பரம் முஸ்தபா பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றனர். சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்து சாதித்தனர். 10ம் வகுப்பில் ஷிவானிபிரியா, மணிகண்டன், அபிலக் ஷயா, ஓவியா சிறப்பிடம் பிடித்தனர். 11ம் வகுப்பு தேர்வில் மாணவி முகம்மது நூருல் ஆயிஷா, மாணவர் அய்யப்பன், மாணவி அப்ராபிர்தோஸ், 12ம் வகுப்பில் மாணவி ஷிவானி, மாணவர் ஜெகதீஸ்வர், மாணவி முபீனாபர்வீன் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.11 மற்றும் 12ம் வகுப்பில் கணித அறிவியலில் 13 பேர், கணிதத்தில் 11, இயற்பியலில் 8, வேதியியலில் 6, உயிரியலில் 3, கணக்குப் பதிவியலில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 10ம் வகுப்பில், கணிதம் 5, அறிவியல் 7, சமூக அறிவியலில் 4 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அன்வர் அலி பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை