காமராஜர் கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு
புவனகிரி; கடலூரில் மாவட்ட அளவிலான அண்ணா மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கீரப்பாளையம் காமராஜர் மருந்தியல், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாணவிகள் ரம்யா, கிருஷ்ணபிரியா, இனியா ஆகியோர், முதன்மை இடங்களை பிடித்து, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பெற்றனர்.சாதனை மாணவிகளை கல்லுாரி நிர்வாகி அழகிரி, முதன்மை செயல் அலுவலர் தமிழரசு சம்மந்தம், நிர்வாக மேலாளர் கேசவன், முதல்வர், துறைத் தலைவர், பேராசிரியர்கள் பாராட்டினர்.