உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துப்புரவு பணியாளரிடம் தகராறு: முதியவர் கைது

துப்புரவு பணியாளரிடம் தகராறு: முதியவர் கைது

கடலுார்: பெண் துப்புரவு பணியாளரை பணி செய்ய விடாமல் தகராறு செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த கண்ணியாடி தோட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சோனா என்கிற சோலைவாழி, 42; ஹிந்து சமய அறநிலையத்துறை துப்புரவு பணியாளர். இவர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி துப்புரவு பணியில் ஈடுபட்டார்.அப்போது, அங்கு குடிபோதையில் வந்த திருவந்திபுரத்தைச் சேர்ந்த செல்வம், 50; என்பவர், துப்புரவு பணி செய்யக்கூடாது என சோலைவாழியிடம் தகராறு செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி