மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
29-Jul-2025
கடலுார்; கடலுாரில் துறைமுகம் அரிமா சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட ஆளுநர் கல்யாண்குமார் தலைமை தாங்கினார். சங்க தலைவராக பாக்கிய பாமா ரமேஷ் பிரபாகரன் பொறுப்பேற்றார். தொடர்ந்து செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் ரத்தினசபாபதி, மாவட்டத்தில் 10 சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவபடுத்தினார். மாவட்ட தலைவர் சிவகண்டன், சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் ரவி வாழ்த்திப் பேசினார். 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வ ழங்கப்பட்டன.
29-Jul-2025