உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது

நெய்வேலி ரவுடி குண்டாசில் கைது

கடலுார்; நெய்வேலியில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வடக்கு மேலுார், செட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த முருகன். இவரது மனைவி லுார்துமேரி, 43; இவர் நெய்வேலி டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த மாதம் 7ம் தேதி வந்த டேவிஸ் பிரவீன், 27; என்பவர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து டேவிஸ் பிரவீனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.கைது செய்யப்பட்ட டேவிஸ் பிரவீன் மீது நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளனஇவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறையில் உள்ள டேவிஸ் பிரவீனிடம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி