மேலும் செய்திகள்
குடிநீர் மினிடேங்க் அரசு பள்ளிக்கு வழங்கல்
12-Sep-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு, ஜெயின் ஜூவல்லரி சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆர்த்தோஸ்கோப்பி (மூட்டு தசை அறுவை சிகிச்சை கருவி) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த், வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவர் சாமிநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், ஆர்த்தோஸ்கோப்பி கருவியை இயக்கி வைத்தார். அரிமா சங்கத் தலைவர் வெங்கடாஜலபதி, செயலாளர் பாலகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் அன்புகுமரன், செயலாளர் பிரபாகர், எலும்பு முறிவு மருத்துவர்கள் கோவிந்தராஜ், ராம்குமார், ஆனந்த், மயக்க மருத்துவர்கள் ராதா, தேவானந்த், முத்துக்குமார், அருவை சிகிச்சை மருத்துவர் அய்யப்பன், மகப்பேறு மருத்துவர் வசந்தி, தலைமை செவிலியர் வெற்றிக்கோடி உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Sep-2025