உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருந்ததியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

அருந்ததியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு அருந்ததியர் நல வாழ்வு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். அமுதவல்லி முன்னிலை வகித்தார். தங்கராஜ், செல்வமுருகன், மருதமுத்து முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், செல்வி, தேன்மொழி, பாக்கியம், பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர். திட்டக்குடி, தர்மகுடிகாடு கிராம மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தேசிய கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை