உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கபடியில் அசத்திய கிராம பள்ளி மாணவர்கள்

கபடியில் அசத்திய கிராம பள்ளி மாணவர்கள்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த துாக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி, மாணவர்களின் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களை பல்வேறு விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள செய்து ஊக்குவித்து வருகிறார். கடலுார் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நெய்வேலியில் நடந்தது. இதில், இப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கபடி போட்டியில் முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் ரவி, நெய்வேலி புனிதபால் பள்ளி தாளாளர் சைமன் அந்தோணிராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், ஆசிரியை ஸ்னோஸ்டைபிலா, அருட்செல்வம் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை