மேலும் செய்திகள்
மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு
15-Nov-2024
ராமநத்தம்; ஆவட்டி அருகே மழையால் வீடுகள் இடிந்த குடும்பங்களுக்கு மங்களூர் ஒன்றிய சேர்மன் நிவாரண உதவி வழங்கினார்.புயல் காரணமாக, ஆவட்டி அடுத்த மா.பொடையூரில் பெய்த மழையில் நாராயணசாமி மனைவி பெரியம்மாள், அண்ணாதுரை மனைவி மேகலா, உலகநாதன் மனைவி செல்வி, வடிவேல் மனைவி கஸ்தூரி, கருணாநிதி, கலையரசன், கொடியன் மனைவி விருதாம்மாள் ஆகியோர் வீடுகள் இடிந்து சேதமடைந்தது.இதனையறிந்த மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், உதவித்தொகை உள்ளிட்ட நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். மேலும், புதிய வீடு கட்டுவதற்கு ஆணையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது, மங்களூர் பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன், ஊராட்சி தலைவர் வாசுதேவன், தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், அழகர்சாமி, சூர்யா, பூமாலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
15-Nov-2024