உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் தீக்குளிக்க முயற்சி

பெண் தீக்குளிக்க முயற்சி

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகே ட்பு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, மனு அளிக்க வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. உடன், பாதுகாப்பு பணியில் இருந்த புதுநகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார், அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை நடத்தினர். இதில், பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு பழனிவேல் மனைவி கலைச்செல்வி,45; என்பது தெரிந்தது. கணவர் இறந்த நிலையில், அவருக்கு சொந்தமான நிலத்தை வேறொருவர் தனது பெயருக்கு மாற்றினார். வேறொருவர் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து கலைச்செல்வியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ