என்.எல்.சி., சுரங்கத்தில் திருட முயன்றவர் கைது
மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் நிலத்தடி நீர் கட்டுப்பாடு யார்டில், நேற்று முன்தினம் இரவு நுழைந்த வாலிபர், அங்கிருந்த கேபிளை திருட முயன்றார். அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து, மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், புதுஇளவரசம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரசாத் 22, என்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பிரசாத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.