உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது

ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது

பண்ருட்டி: கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பண்ருட்டி, திருவதிகையை சேர்ந்தவர் பிரபு,43; ஆட்டோ டிரைவரான இவர், சக ஆட்டோ டிரைவர் நந்தகோபாலகிருஷ்ணனை கொலை செய்த வழக்கில், பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். பிரபுவின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள பிரபுவிடம், பண்ருட்டி போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை