மேலும் செய்திகள்
வி ஸ்கொயர் மாலில் இசை நிகழ்ச்சி
04-Sep-2024
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளருக்கு, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கப்பட்டது.கடலுார் பாதிரிக்குப்பத்தில், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரிமா மாவட்ட தலைவர் உமாசங்கர், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், தொழிலதிபர் சக்திவேல், பாபுஜி முதியோர் இல்லம் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ராஜன் வரவேற்றார். கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் முகாமை துவக்கி வைத்தார். அவருக்கு, கடலுார் சில்வர் ஸ்டார் அரிமா சங்கம் சார்பில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி துவக்கவுரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர்கள் சார்லி பெலிக்ஸ், வில்லியம்ஸ் மற்றும் ஆரோக்கியசாமி, திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினர்.
04-Sep-2024