உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு உறுதிமொழி 

 விழிப்புணர்வு உறுதிமொழி 

கடலுார்: உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு கடலுாரில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் தாய்மொழியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளின் பாதுகாப்பினை வலுப்படுத்திடவும், மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை, தாய்மொழியினை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்றநடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம் என்ற உறுதி மொழி இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் செல்வன், தீபா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி