மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
15-Oct-2025
சிதம்பரம்: சிதம்பரம் முஸ்தபா பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் அன்வர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல் வரவேற்றார். சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் மணிமாறன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், முகமது சல்மான், பொன்ராஜ், சக்திவேல் சதீஷ், லோகேஸ்வரன், ராம் இந்திரன் ஆகியோர் விபத்தில்லாக தீபாவளி கொண்டாடுவது குறித்தும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியவர்களை மீட்பது குறித்த வழிமுறைகளை மாணவ ர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.
15-Oct-2025