மேலும் செய்திகள்
அட்சயாமந்திர் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்
10-Nov-2026
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சம்பந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒரு மாணவர் ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வேப்பூர் அடுத்த ம.புடையூர் ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். அங்குள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒரு மாணவர், ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி, மரம் வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பு அதிகரித்தல் மற்றும் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
10-Nov-2026