உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐயப்பன் சுவாமி ஊர்வலம்

ஐயப்பன் சுவாமி ஊர்வலம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளையில் ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளையில் சபரிமலை சென்று வந்த, ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடத்துவது வழக்கம்.இந்த ஆண்டு சபரிமலை சென்று வந்த பக்தர்கள் சார்பில், நேற்று முன்தினம் ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 6.00 மணிக்கு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகளில் வீதியுலா சென்றது. இதில் ஐயப்ப பக்தர்கள் கும்மியடித்தும், சரண கோஷ பாடல்கள் பாடி வீதியுலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி