கோவில் திருப்பணி துவக்கம் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
கடலுார் : துாக்கணாம்பாக்கம் திருமலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் திருப்பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் திருமலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் துவக்க விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., திருப்பணியை துவக்கி வைத்தனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சந்திரவேணி, செயல் அலுவலர் வேல்விழி, லீமா அய்யப்பன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், முன்னாள் நிலவள வங்கித் தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஞானபிரகாசம், ரமேஷ், மனோகர், கனகராஜ், தமிழரசி பிரகாஷ், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.