உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரணம்

கடலுாரில் 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரணம்

கடலுார் : கடலுார் ஒன்றிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். கடலுார் வெளிச்செம்மண்டலத்தில் கோண்டூர், நத்தப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிராஜ், நிர்வாகிகள் அண்ணாதுரை, வேணு, ரவி, ரங்கநாதன், பரத், அசோகன், சங்கர், அன்பழகன், தேவநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை