உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனை கழிவறையில் ஆண் சிசு: திட்டக்குடியில் பரபரப்பு

அரசு மருத்துவமனை கழிவறையில் ஆண் சிசு: திட்டக்குடியில் பரபரப்பு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த ஆண் சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நேற்று மதியம் 12:00 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு, சிகிசைக்காக வந்த பெ.பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இயற்கை உபாதைக்கு சென்றார். அப்போது கழிவறையில் ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த, திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் தலைமையிலான போலீசார் சிசுவை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !