உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தற்காலிக கழிப்பிடத்தில் துர்நாற்றம்: அண்ணா விளையாட்டரங்கில் அவலம்

தற்காலிக கழிப்பிடத்தில் துர்நாற்றம்: அண்ணா விளையாட்டரங்கில் அவலம்

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நடை பயிற்சி செய்வோர் முகம் சுளித்து வருகின்றனர்.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். கூடுதல் மாணவர்கள் வருகையையொட்டி விளையாட்டுத்துறை 'மொபைல் டாய்லட்' ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பின் அதை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டதால் தற்காலிக கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் விளையாட்டரங்கையே நாறடிக்கிறது.மேலும், விளையாட்டு பயிற்சி பள்ளியில் உள்ள கழிப்பிடமும் நிரம்பி வழிவதால் அங்கிருந்தும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், முதியவர்கள், மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் நடைபயிற்சி செய்யும் பாதையை மாற்றி வேறு இடத்தில் நடந்து செல்கின்றனர். அண்ணா விளையாட்டரங்கிற்கு நோய் தீர்ப்பதற்காக நடைபயிற்சி மேற்கொள்வோர், நோயை வாங்கி செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை