மேலும் செய்திகள்
டாஸ்மாக் மதுபாட்டில் கடத்தி சென்றவர் கைது
12-Oct-2024
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் பைக்குகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் ஜங்ஷன் சாலையில் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 10ம் தேதி தனது பைக்கை கடைமுன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தை சேர்ந்த கிட்டு,40; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மேலும், ஒரு பைக் திருடியது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து போலீசார், கிட்டுவை கைது செய்து, அவரிடமிருந்த இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கிட்டுவ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
12-Oct-2024