பா.ம.க., மாவட்ட செயற்குழு
கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் நடந்தது.பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் சார்லஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சேகர், வைத்தியலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்க தலைவர் குமாரசாமி, பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆறுமுகம், அலுவலக செயலாளர் முருகவேல். வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகி சிவகாமி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், சதாசிவம், மூர்த்தி, பிரகாஷ், எழில்செல்வன் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகர், நகர செயலாளர்கள் சண்முகம், ஆனந்த், மாவட்ட அமைப்பாளர் கயல்ராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் செப்டம்பர் 9ம் தேதி அன்புமணி பிறந்த நாளில் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்குவது. இலவச பொது மருத்துவ முகாம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர தலைவர் சத்யராஜ் நன்றி கூறினார்.