உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நகராட்சியில் பேனர்கள் அகற்றம்

விருத்தாசலம் நகராட்சியில் பேனர்கள் அகற்றம்

விருத்தாசலம்; விருத்தாசலம் நகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. விருத்தாசலம் நகராட்சி கடைவீதி, பாலக்கரை, கடலுாார் ரோடு, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் திருமணம், கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன.விருத்தாசலம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.அப்போது, நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பர்வையாளர்கள் ஆறுமுகம், (பொறுப்பு) கணபதி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை