உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நவீன டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்

நவீன டிசைன்களில் அழகான நகைகள் ஸ்ரீ வள்ளி விலாஸ் அசத்தல்

தங்க நகைகளுக்கு பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது கடலுார் லாரன்ஸ் ரோடு கதவு எண் 43,44ல், ஸ்ரீ வள்ளி விலாஸ் நகைக்கடை. இங்கு, தரமிக்க ஹால்மார்க் தங்க நகைகள் பி.டி.எஸ்., முத்திரையுடன் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப நகைகள் வடிவமைத்து தருகின்றனர்.காதணி, வளையல், செயின், மோதிரம், நெக்லஸ், கல்பதித்தஅட்டிகைகள் நவீன டிசைன்களில் நகைகள் உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 916 கே.டி.எம்., நகைகள் கம்ப்யூட்டரில் வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது.இங்கு, தங்கம், வைடூரியம், நவரத்தின நகைகள், திருமணத்திற்கு எண்ணற்றரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கொலுசு, மெட்டி, வெள்ளிப்பாத்திரங்கள், ஒட்டியானங்கள், முத்து, பவள நகைகள், கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா, நெல்லுார் போன்ற நகரங்களில் இருந்துகொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.இது பாரம்பரிய நகைக்கடை என்பதோடு கைராசியான ஸ்தாபனம் என்பதுமக்களின் நம்பிக்கை ஆகும். கண் கவர் கலைப்பெட்டகமாகவும், தரமானதங்க நகைகள் வழங்குவதில் பல தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கனிவான சேவைவாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. கடலுார் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில் எண்ணற்ற டிசைன்களில் நகைகளை விற்பனை செய்கின்றனர். 500, 1000, 2000, 5000, 10000 ரூபாய் செலுத்தும் தங்க குபேர சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. இதேபோன்று, 500, 1000, 2000, 5000, 10000 செலுத்தும் லட்சுமி கடாட்சம் பணம் சேமிப்பு திட்டம் உள்ளது. தங்க தாமரை தங்க முதலீடு திட்டம் உள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறது. ஆயுதப்பூஜை மற்றும் தீபாவாளி பண்டிகையையொட்டி, புதுப்புது டிசைன்களில் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.தங்களுக்கு கடலுார் லாரன்ஸ் ரோடு மற்றும் சிதம்பரம் கீழரத வீதி தேரடி எதிரில் ஆகிய இரண்டு இடங்களை தவிர்த்து, கடலுாரில் புதிய கிளைகள் ஏதுவும் திறக்கவில்லை என ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை