உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் தீ வைத்து எரிப்பு; போதை ஆசாமி கைது

பைக் தீ வைத்து எரிப்பு; போதை ஆசாமி கைது

பண்ருட்டி; பண்ருட்டி அருகே போதையில் பைக்கிற்கு தீ வைத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னராசு, 45; இவர், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன்,35; என்பவர், போதையில் ஆபாசமாக பேசினார். இதை சின்னராசு மனைவி கலையரசி தட்டிகேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, கடை வாசலில் நிறுத்தியிருந்த சின்னராசுவின் பைக்கிற்கு காத்தவராயன் தீ வைத்தார். இதில் பைக் தீப்பிடித்து சேதம் அடைந்தது.இதுகுறித்து கலையரசி கொடுத்த புகாரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, காத்தவராயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி