இருதரப்பு மோதல் :15 பேர் மீது வழக்கு
பரங்கிப்பேட்டை: மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புவனகிரி அடுத்த மேல்குறியாமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி அதிஷ்டலட்சுமி,29; இவரது வீட்டு எதிரில் அதே பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் சமீபத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தினார். இதனை சிவக்குமார் தட்டிக்கேட்டார். இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, கலைந்து சென்றனர். பின், மறுநாள் மீண்டும் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் இருதரப்பிலும் சேர்ந்த வீரமணி, செங்குட்டுவன், காளிமுத்து, சிவக்குமார், விஸ்வநாத், அஜய் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.