உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா பள்ளியில் பறவைகள் தினம்

ஜெயப்பிரியா பள்ளியில் பறவைகள் தினம்

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ஜெயப்பிரியா வித்யாலாயா மெட்ரிக் பள்ளியில் பறவைகள் தினம் கொண்டாடப்பட்டது. பறவைகள் பாதுகாப்பு குறித்து இளம் சமூகத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பறவைகள் தினத்தை ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் கொண்டாடப்பட்டது.பல்வேறு வகையான பறவைகளின் உடல் அமைப்பை போன்று உடை அணிந்து வந்து, மாணவர்கள் பறவைகளாகவே மாறி, பறவைகளின் நன்மைகள் குறித்து அழகாக எடுத்துரைத்தனர். ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும தலைவர் ஜெயசங்கர், இயக்குநர் தினேஷ், வடக்குத்து பள்ளியின் செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர் சிதம்பரி மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ