பா.ஜ., மகளிரணி நிவாரண உதவி
பரங்கிப்பேட்டை; கன மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் பெரிய கங்கணாங்குப்பத்தில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஷ்வர், நிவாரண உதவிகள் வழங்கினார்.கன மழையால் கடலுார் பெரிய கங்கணாங்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஷ்வர், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவத்தி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார். நிர்வாகிகள், வீர வன்னியராஜா, சிலம்பரசன், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.