உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் மாவட்டம் முழு வதம், தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ., வினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் கேரளா, கர்நாடகா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தமிழக தி.மு.க., அரசை கண்டித்து, தமிழ கம் முழுவதும் நேற்ற பா.ஜ.,வினர், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுாரில் பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன், நேற்று காலை தனது வீட்டின் முன், கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கிழக்கு மாநகர துணை தலைவர் ஏழுமலை, ஓ.பி.சி.,அணி முருகன், சிறுபான்மை பிரிவு அக்பர் ஷெரிப், சிவாஜி கணேசன், ஆன்மிக பிரிவு ரகுநாத், கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புவனகிரி

கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் புவனகிரி பகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளில் பா.ஜ., வினர் கருப்புக்கொடி ஏற்றினர்.

பெண்ணாடம்

பெண்ணாடத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு அக்கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர, தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில், பா.ஜ., நகர தலைவர் சரவணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம்

சிதம்பரம் பள்ளிப்படையில் முன்னாள் எம்,எல்.ஏ., அருள் தலைமையில், வீட்டில் கருப்பு கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் ராணுவ பிரிவு மாநில துணைத் தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் தங்கமணி, வக்கீல் மணிமாறன், ஆனந்த், தாமரைக்கண்ணன், மணிவேல், சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை