பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்
கிள்ளை; தொடர் மழையின் காரணமாக நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனச்சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து செல்கின்றனர். இந்நிலையில், பிச்சாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நேற்று படகு சவாரி நிறுத்தப்பட்டது.மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. படகில் தேங்கியிருந்த தண்ணீரை, படகு ஓட்டுநர்கள் வெளியேற்றினர்.அதேபோல், பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் இயக்கப்படும் படகுகளும் இயக்கப்படவில்லை.