உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளி சிறுவர்களின் விஷம விளையாட்டு

மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளி சிறுவர்களின் விஷம விளையாட்டு

கடலுா : கடலுார் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், கடலுார் இம்பீரியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின், மோப்பநாய் பீட் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்கள், சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடையே அச்சம் ஏற்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மொபைல் எண் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், கடலுார் முதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் அண்ணன், தம்பிகள், மொபைல் போனில் இருந்து அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டுள்ளனர். பின், என்ன பேசுவது என தெரியாமல் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி உள்ளனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி