உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனைவருக்கும் போனஸ்: பணியாளர் சங்கம் கோரிக்கை

அனைவருக்கும் போனஸ்: பணியாளர் சங்கம் கோரிக்கை

கடலுார்; தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து அரசுப்பணியாளர்கள், தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்று ஒரு மாத சம்பளத்தை போனசாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். போனஸ் வழங்க சட்டத்தில் இடமில்லாத பணியாளர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.துாய்மை பணியாளர்களுக்கு வழங்குவது போல, துாய்மை காவலர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரசு போனஸ் வழங்கினாலும், அதிகாரிகள் வழங்குவதில்லை. அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி