மேலும் செய்திகள்
உறவினரை தாக்கியவர் கைது
09-Sep-2024
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே, பக்கத்து வீட்டில் துாக்கில் சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி புவனேஸ்வரி. சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதையடுத்து, புவனேஸ்வரியின் மகன் ஜனார்த்தனன்,10; பாலூர் நடு காலனியில் உள்ள பாட்டி ஆனந்தாயி (புவனேஸ்வரியின் தாய்) வீட்டில் தங்கி சன்னியாசிப்பேட்டை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ஜனார்த்தனன், பக்கத்து வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், அவரது மாமா வசந்த் தேடி சென்றார். அப்போது, பக்கத்து வீடான ஷோபனா என்பவரது வீட்டில், கழுத்தில் துணியால் துாக்குபோட்ட நிலையில் ஜனார்த்தனன் தொங்கியபடி இருந்தார். உடன் ஜனார்த்தனனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜனார்த்தனன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Sep-2024