அய்யனாரப்பன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஆவண மாத பவுர்ணமி பிரம்மோற்சவம் கடந்த 20 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை பிள்ளையார் கோவிலில் இருந்து 108 பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து மூலவர் அய்யனாரப்பன், பூரணி, பொற்கலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கிட்டு பூஜை செய்தனர். இன்று, இரவு உற்சவர் அய்யனாரப்பன், பூரணி,பொற்கலை சுவாமி வீதியுலா நடக்கிறது.