காலை உணவு திட்டம் பண்ருட்டியில் துவக்கம்
பண்ருட்டி: பண்ருட்டியில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது. தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இத்திட்டம் தமிழகம் முழுதும் நேற்று துவங்கியது. பண்ருட்டியில் நகராட்சி முத்தையர் மேல்நிலைப் பள்ளி, கருணை பிரகாச வித்யசாலை, ஏ.வி.,நடுநிலைப் பள்ளியில் துவக்கவிழா நடந்தது. விழாவிற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் காஞ்சனா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், கட்டட பிரிவு உதவியாளர் ஜெய்சங்கர், நகர அவைத் தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், கவுன்சிலர் சோழன், ஒப்பந்ததாரர் செந்தில், குமார், நகர மாணவரணி, பார்த்திபன், தகவல் தொழில்நுட்ப அணி மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.