உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் கதவை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 53. இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.நெல்லிக்குப்பத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மாடி வீட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வராததால் திருட்டு போன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசில் கூறியுள்ளனர்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை