தாய்ப்பால் வார விழா
சிதம்பரம்:சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி, இன்னர் வீல் சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. கஞசித் தொட்டி அருகே நடந்த நிகழ்ச்சிக்க கேசவன், அனிதா தலைமை தாங்கனர். மகப்பேறு டாக்டர் அங்கிதா சிங், குழந்தை நல டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் , தாய்ப்பாலின் அவசியம் குறித்தும். முதல் ஆறு மாதங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 30 தாய்மார்களுக்கு சத்துமாவு தொகுப்பு வழங்கப்பட்டது. பாவிக் பட்டேல் நன்றி கூறினார்.