உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத மோதல் அண்ணன், தம்பி கைது

முன்விரோத மோதல் அண்ணன், தம்பி கைது

கடலுார்: கடலுார் அருகே முன்விரோதத்தில், ஒருவரை வீடு புகுந்து தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய், 21; இவரது தந்தை பஞ்சன்,70, என்பவர் கடந்த 2020ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அதே ஊரை சேர்ந்த சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.கொலை சம்பவம் காரணமாக சஞ்சய் மற்றும் சசிக்குமார் குடும்பத்திற்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி, சசிகுமாரின் அக்கா கணவர் மணிகண்டன், 46, வீட்டிற்கு சென்ற சஞ்சய், 21, அவரது சகோதரர் விஜய்,23, மற்றும் செல்வமணி,37, ஆகியோர், வீட்டின் இரும்புகேட்டை உடைத்து, மணிகண்டனை தாக்கினர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிந்து செல்வமணியை அன்றே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சஞ்சய், விஜய், ஆகிய இருவரும் புத்திரங்குப்பம் குவாரி அருகில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க முற்பட்டபோது, தப்பியோடியனர். அப்போது குவாரி சரிவில் தவறி விழுந்ததில் சஞ்சய் காலிலும், விஜய் கையிலும் எலும்புமுறிவு ஏற்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி