| ADDED : நவ 20, 2025 05:48 AM
திட்டக்குடி; திட்டக்குடியில் பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. திட்டக்குடி நகராட்சியைச் சுற்றியுள்ள கோழியூர், தி.இளமங்கலம், கீழ்ச்செருவாய், இடைச்செருவாய், உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்றாட தேவைகளுக்கு திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார் உட்பட பகுதிகளுக்கு சென்று வரு கின்றனர். பஸ் நிலைய வளாகம் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி, பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டுAம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, இயக்கம் மற்றும் பராமரிப்பு மானிய திட்டத்தில், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் முரளிதரன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார். துணை சேர்மன் பரமகுரு, நகராட்சி பொறியாளர் ராமன், பொதுப்பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம், உட்பட பலர் பங்கேற்றனர்.