மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு விருது
28-Jul-2025
கடலுார்: கடலுாரில் திருப்பாதிரிப்புலியூர் வணிக வைசிய சங்க கல்வி அறக்கட்டளை சார்பில் நலிவுற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன்மிகு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. கல்வி அறக்கட்டளை தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையும், நலிவுற்ற மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சங்க செயலாளர் ரவிக்குமார், பொருளாளர்கள் பாலாஜி, மோகன், சங்க துணை கமிஷனர் ஆணையர் சுந்தரமூர்த்தி செய்திருந்தனர்.
28-Jul-2025