உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நெல்லிக்குப்பம் : சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அண்ணாகிராமம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் செய்திக்குறிப்பு; பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் 6 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்.நெற்பயிருக்கு சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது குத்தகைக்கு பயிர் செய்பவர்களும் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கபட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களிலும் காப்பீடு செய்யலாம்.முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு பயிர் சாகுபடி அடங்கல் நகல், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், ஆகியவற்றை கொண்டு காப்பீடு செய்ய வேண்டும்.ஏக்கருக்கு 548 ரூபாய் காப்பீடு தொகையாகும். சம்பா பருவத்தில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் நெல் பயிருக்கு காப்பீடு செய்வது அவசியம். வரும் 15ம் தேதி கடைசி நாள். விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை