உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரங்கிப்பேட்டை -விருதை சாலையில் விபத்துகள் தடுக்கப்படுமா: கண்துடைப்பாக மாறிய அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை -விருதை சாலையில் விபத்துகள் தடுக்கப்படுமா: கண்துடைப்பாக மாறிய அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்ததால், அதற்கேற்ப 35 கி.மீ., தொலைவிற்கு, இருவழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், தமிழ்நாடு சாலை மேம்பாட் டுத் திட்டத்தில், ரூ.137 கோடி செலவில் சாலை அகலப்படுத்தி, சாலை அமைக்கப்பட்டது.10 மீட்டர் அகலத்தில் சாலை விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து அதிகரித்து சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால், புவனகிரி பெருமாத்துாரில் இருந்து பி.உடையூர் வரை விபத்துகள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.கடந்த காலங்களில்அடுத்தடுத்த இரு தினங்களில் ஒரே இடத்தில் ஏற்பட்ட தனித்தனி விபத்தில் மூவர் பலியாகினர்.அடுத்ததடுத்த விபத்துக்களில் இதுவரையில், 15க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.எனவே, பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் பெருகிவரும் விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், புவனகிரி பங்களாவில் இருந்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 35 கி.மீ., தொலைவு வரை சாலையில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அதையடுத்து, விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சிதம்பரம் அப்போதைய ஆர்.டி.ஓ., ரவி, தற்போதைய வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் ஐந்து இடங்களில், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.முதற்கட்டமாக தானியங்கி சிக்னல், கண்காணிப்பு கேமரா மற்றும் ரப்பர் வேகத்தடை அமைப்பதாக முடிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆய்வு என்பது வெறும் கண் துடைப்பாக மாறியது. இதனால், மீண்டும் சாலையில் விபத்துக்கள் நடப்பது அதிகரித்துள்ளது.சமீபத்தில் வண்டுராயன்பட்டு சாலை வளைவில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தியிருந்த ராட்சச லாரியின் மீது கார் மோதி மூவர் பலியாகினர். புவனகிரியை சேர்ந்த சந்தோஷ் என்ற சிறுவன் லாரியில் சிக்கி பலியானார். மஞ்சக்கொல்லையை சேர்ந்த தவில் வித்வான் கலைவாணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவங்கள் நடந்தது.எனவே, இனியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தாமதிக்காமல், பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ