உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருவர் மீது வழக்கு

இருவர் மீது வழக்கு

விருத்தாசலம் : பொது இடத்தில் மது அருந்திய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, சத்தியவாடி சாலையோரம் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், நேமம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் மகன் ராஜேஷ், 32, செல்லதுரை மகன் சின்னமணி, 29, என தெரிந்தது. இருவர் மீதும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ